2015 வரவு செலவுத்திட்டத்தின் மீதான இன்றைய 7வது நாள் விவாதத்தின் போது ஆளுந்தரப்பு அமைச்சர்களான மில்ரோய் பெர்னாண்டோவுக்கும், ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலேயே இன்று விவாதம் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளை, குறித்த அமைச்சுக்கு முன்பு அண்மையில் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய், அமைச்சர் ராஜிதவைக் குற்றம் சாட்டியதால் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கடும் தொனியில் ஒருவரையொருவர் திட்டி தீர்த்துள்ளனர். இறுதியில் அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அமைச்சர் மில்ரோய் ஆளுந்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக திட்டமிட்டே ராஜிதவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















