பாடசாலை பேருந்து விபத்து : பெண் நடத்துநர் சாவு

bus-acc5பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வயலுக்குள் தடம்புரண்டு விழுந்ததில் நடத்துநர் (பெண்) உயிரிழந்த சம்பவம் ஒன்று பாணந்துறை வாதுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மொரொந்துடுவ கல்துடேயிலிருந்து பாணந்துறை வரை பாடசாலை மாணவர்களை ஏற்றிசென்ற பேருந்தே மொரொந்துடுவ பாலத்துக்கு அருகில் புரண்டு இன்று காலை விபத்துக்குள்ளாது.

பிரதேசவாசிகளால் பேருந்தில் இருந்த மாணவர்கள் மற்றும் நடத்துநர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நடத்துநரான பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply