மகிந்த ராஜபக்ச மூண்டாவது தரமும் போட்டியிடலாம் எண்டும் அதுக்கு எந்த தடையும் இல்லை எண்டும் அந்த அறிவிப்ப விடுக்கவும் அவருக்கு தடையில்ல எண்டும் உச்ச நீதிமன்றம் சட்ட விளக்கம் அனுப்பி வைச்சிருக்குதாம்…
ராஜபக்சவே எழுதிக் குடுத்த சட்ட விளக்கமாய் இருக்குமோ எண்டுறதுதான் இலங்கைத் தீவில உள்ள அத்தின சனங்களுக்கும் உள்ள சந்தேகம்…
சர்வமும் நானே என்று சர்வாதிகார ஆட்சி நடத்திற நாட்டில மகிந்த போட்டியிட ஏலாது எண்டோ அல்லது அந்த அறிவிப்ப அவர் விடுக்க ஏலாது எண்டோ ஒரு தீர்ப்பு வருமென்று நீங்கள் ஆராவது நினைச்சிருப்பியளே? கட்டாயம் இல்லை…
இலங்கையில இருக்கிற நீதித்துறை, காவல்துறை, சட்டத்துறை எல்லாமும் ராஜபக்சவுக்கு ஏற்ற மாதிரி வளைக்க கூடியது. அவரே வளைக்கிறது. அவரே வனையிறது எண்டு எல்லாம் எல்லாரும் விமர்சிக்கினம்…
அடே பொடிப்பயளே நீதித்துறையை நீ விமர்சிக்கலாமோ இது நீதியின் தீரப்படா எண்டு தாத்தா நக்கலாய் சொல்லுறார். நீதித்துறை எண்டால் என்ன எண்டு நாங்கள் பதிலுக்கு கேப்பம்தானே?
மூண்டு நாளில மூண்டு மணிக்கு விளக்கம் தாங்கோ எண்டு கேக்கிற ஜனாதிபதிக்கு நல்ல தீர்ப்பு குடுத்திருக்கினம்… சர்வாதிகார நாட்டில நீதி எண்டுறது மருந்துக்கும் இல்லை கண்டியளோ? அவையள் மகிந்த நினைக்கிற விளக்கம் குடுக்காட்டி என்ன நடக்குமெண்டு அவைக்குத் தெரியும்தானே?
பிரதம நீதியரசருக்கு நடந்தது எல்லாருக்கும் தெரியும்தானே?
நீதி எண்டுற பெயரால எங்களுக்கு எத்தினை அநீதியள் இழைக்கப்பட்டிருக்குது. தமிழ் மக்களுக்கு நீதியின்ட தீர்ப்புக்கள் அநீதி. ஆனால் ஆளுற சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்களுக்கு அங்கீகாரம் குடுக்கிறதுதான் இஞ்ச நீதி.
போற போக்கப் பாத்தால் ராஜபக்ச நிரந்தர ஜனாதிபதி எண்டுற சட்டத்தை கொண்டு வந்தாலும் கொண்டு வருவினம்..
ராஜபக்ச நினைக்கிறதுதான் நீதி…
ராஜபக்ச நினைக்கிறதுதான் எல்லாம்…
ராஜபக்சவின்ட தேவைக்கும் அதிகாரத்துக்கும்தான் எல்லாம்…
சர்வ ராஜபக்சம்…
அதுதான் சர்வாதிகாரம்…
வயசுக்கு ஏற்ற கதை இல்லை எண்டு நினைப்பியள். ஆனால் இதெல்லாம் நல்லதுக்கு இல்லை எண்டுறது மட்டும் விளங்குது. நடக்கட்டும். நடக்கட்டும்..
யாழ்ப்பாணத் தம்பி
கேலிச்சித்திரம்: டெய்லிமிரர்
















