இன்றைய ராசிப் பலன்கள் 13.11.2014

astrology2மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்: கடந்த 2 நாட்களாக இருந்த டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலையை முடிப்பீர்கள். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுகப் பிரச்னை வரக்கூடும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரபலங்க ளால் ஆதாயமடைவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக் கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத் தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவர். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர். உத்யோகத் தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: கடந்த 2 நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்கள் மீதான விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக் கும். உத்யோகத்தில் வேலைப்பளு இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மகரம்: கடினமான வேலை களையும் எளிதாக முடிப்பீர். மூத்த சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். கனவு நனவாகும் நாள்.

Tags: 

Leave a Reply