விபசாரத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு பட நடிகைகள் அடிக்கடி கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் சுவேதா பாசு பிடிபட்டார். நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது
கையும் களவுமாக போலீசார் இவரை பிடித்தனர். படவாய்ப்புகள் இன்றி பண கஷ்டம் ஏற்பட்டதால் விபசாரத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் இன்னொரு பட கதாநாயகியும் போலீசில் சிக்கியுள்ளார். புனேயில் போலீசார் விபசார வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அந்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. எல்லோரையும் போலீசார் கைது செய்தனர்.
















