வடக்கு மாகாண முதலமைச்சா் யாா் என தெரியாத மாணவா்கள்

???????????????????????????????நீர்வேலி பாடசாலை ஒன்றில் மாணவர்களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் யார் என்று கேள்வி எழுப்பிய போது, அதற்கான விடை இரண்டு மாணவர்களுக்கே தெரிந்திருந்ததாக,

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர், கூறுகையில், நீர்வேலியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு இன்று விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அவ்வேளையில் அங்கிருந்த 150இற்கும் மேற்பட்ட மாணவர்களின் பொது அறிவை சோதித்து பார்க்கும் பொருட்டு, வடமாகாண முதலமைச்சர் யார் என கேள்வி கேட்டேன்.

அதற்கு அங்கிருந்த மாணவர்களில் இருவர் மட்டுமே சி.வி.விக்னேஸ்வரன் என பதில் கூறினார்கள். வேறு எவரும் முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. பொது அறிவு விடயங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும்படி அப்பாடசாலை ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறினேன். மாணவர்கள் பாடக்கல்வியை எவ்வளது தூரத்திற்கு கற்கின்றார்களோ அந்தளவுக்கு பொது அறிவும் இருக்க வேண்டும். பொது அறிவு மாணவர்களுக்கு அவசியமானதொன்று. மாணவர்களின் பல்தரப்பட்ட அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு நூல்களை அன்பளிப்பு செய்து வருவதாகவும் மூர்த்தி மேலும் கூறினார்.

Tags: , ,

Leave a Reply