ஞானம் அறக்கட்டளையின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் மன்னார் மக்களுக்கு வழங்கிவைப்பு

Gnanam-1லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது நாட்டின் பல பாகங்களிலும் தனது மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கு, ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் தொடர்ச்சியாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை லைக்கா ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் சுயதொழில் முயற்சிக்கான நிதி வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான துவிச்சக்கர வண்டி ஆகியவை வைபவரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 5 குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு நிதியாக தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வானது லைக்கா ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.கேதீஸ்வரராஜ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு, மன்னார் நானாட்டான் சமூக சேவை அதிகாரிகள் மற்றும் பெருமளவான பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.
Gnanam-2

Gnanam-3

Gnanam-4

Gnanam-5

Gnanam-6

Gnanam-7

Gnanam-8

Tags: , ,

Leave a Reply