விபத்து மரணத்தைத் தடுக்க ஏதாவது செய்வோம்

விபத்தில் மரணமடைந்த வேலணையைச் சேர்ந்த கோபாலபிள்ளை குகன் வயது 35 என்ற இளைஞனின் மரணச் சடங்குக்கு சென்றிருந்தேன்.

வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றுகின்ற அந்த இளை ஞன் கடமை நிமித்தம் கடந்த 18ஆம் திகதி வாகனத்தில் சென்ற வேளை, பூநகரிப் பகுதியில் விபத்து நேர்ந்து அவர் உயிரிழந்து போனார்.

அந்த இளைஞனின் மரணச் சடங்கு நேற்று கந்தர்மடம் இந்து மகளிர் ஒழுங்கையில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பல்கலைக் கழக நண்பர்கள், பாடசாலைத் தோழர்கள், உற் றார், உறவினர், அயலவர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை யின் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் என ஏகப்பட்டவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அங்கு கண்ணீர் விட்டு அழாத வர்கள் யாரும் இல்லை எனலாம்.

விபத்தில் மரணித்த குகன் ஆற்றல்மிக்க, எவருக்கும் உதவும் மனப்பாங்குமிக்க, ஒழுக் கம் நிறைந்த பிள்ளை. அவரை இழந்து விட்டோம் என்று அஞ்சலி உரையாற்றிய அத் தனை பேரும் கண்ணீர் விட்டுக் கூறினர்.

அவரின் நண்பர்கள் அழுது புலம்பினர். அந்த இளைஞனின் சகோதரியின் சின்னப் பிள்ளைகள் மாமா… மாமா… என்று அழுத போது, இந்த உலகமே வெறுத்துப் போனது.

அந்த இளைஞனின் தந்தையார் கொள்ளிக் குடத்தை ஏந்தியபடி மெளனமாக நின்றபோது கடவுள் மீது கோபம் வந்தது. இறைவா! ஏன் தான் இப்படி என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கும்.

மக்கள் சமூகம் என்ற வகையில் நாம் எல் லோரும் விபத்து மரணங்களின் பங்காளிகள். எனினும் இதை மறந்து நாம் செயற்படுகின்றோம்.

விபத்துச் சம்பவத்தில் இளைஞன் பலி; குடும்பத் தலைவன் மரணம்; இளம் தாய் உயிரிழப்பு; பள்ளிச் சிறுவன் பரிதாப இறப்பு என்றெல்லாம் செய்தித்தாள்களில் படித்து விட்டு, அடுத்த செய்திகளைத் தேடுகின்ற அள வில் வாழப் பழகிவிட்டமை எங்கள் அறியாமை என்பதை மட்டும் உணர முடிகிறது.

ஒரு விபத்து ஏற்படுத்திய மரணத்தின் பின் னால் பிள்ளையை இழந்த பெற்றோர், சகோ தரனை இழந்த சகோதரர்கள், தாயை இழந்த பிள்ளைகள், தந்தையைப் பறிகொடுத்த குடும் பம் என மிகப்பெரியதொரு அவலம் பரந்து விரிந்து மனித வாழ்வையே வெறுக்க வைத்து விடுகிறது.

எனவே அன்புக்குரியவர்களே! விபத்து மர ணத்தை தடுக்க என்ன வழி என்று நாம் ஆரா யாமல் இருப்பது; அவல மரணங்களும் துன்ப வாழ்வும் நீண்டு நிலைக்கவே வழிவகுக்கும்.

எனவே விபத்து மரணத்தைத் தடுக்கும் வழியைத் தேடுவோம். வடக்கு மாகாண சபை யின் நிர்வாக எல்லைக்குட்பட்ட உத்தியோகத் தர்கள் அத்தனைபேரும் ஒன்றுகூடி விபத்தை தடுத்தல் என்ற விடயத்தை கையிலெடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினால், போக்குவர த்து பொலிஸாரின் பொறுப்பை உணர்த்தி னால், சாரதியப் பயிற்சி நிறுவனங்களின் கட மைகளை வலியுறுத்தினால், எடுத்தவுடன் சாரதிய அனுமதிப்பத்திரத்துக்கு கையயழுத்திடல் என்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் விபத்து மரணம் தருகின்ற பேரிழப்பை-துன்பத்தை தடுக்க முடியும்.

இதை வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலகம் சார்ந்த உத்தியோகத்தர்கள் தங்கள் சக உத்தியோகத்தர் குகனின் பெயரால் முன்னெடுக்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!