இன்றைய ராசிப் பலன்கள் 14.11.2014

astrology16மேஷம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்: கணவன்,மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண் பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம்: ராசிக்குள் சந் திரன் தொடர்வதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தாரின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங் கள். அடுத்தவர்களைக் குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை கள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமத மாகி முடியும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சிலர் உங்களிடம் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத் தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரி கள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப் படுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முடிப்பதா, அதை முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூற வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மகரம்: பிள்ளைகள் பொறுப் பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்: ராஜதந்திரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களால் பயனடைந் தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியா பாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்,பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

Tags: 

Leave a Reply