நடிகர் விஜய் தாயார் இயக்கிய ‘நண்பர்கள்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை மம்தா குல்கர்னி போதை பொருள் வழக்கில் சிக்கி கென்ய போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பையை சேர்ந்தவர் நடிகை மம்தா குல்கர்னி. இவர் தமிழ், வங்காளம், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அரைநிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ள மம்தா குல்கர்னி, போதைப்பொருள் வழக்கில் சிக்கி துபாய் சிறையில் இருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் விக்கி கோசுவாமியை காதலித்தார். அவர் சிறையில் இருந்து திரும்பி வந்தவுடன் அவரை திருமணம் செய்து கென்யாவில் செட்டிலானார்.
இந்நிலையில் நேற்று கென்ய போலீஸார் மம்தா குல்கர்னியையும், அவரது கணவரையும் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்தனர். இவர்கள் இருவரும் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருமே நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
















