மகிந்தவால் இடமாற்றம் பெற்ற யாழ். புகையிரத நிலைய பிரதான அதிபர்

Mahinda-Rajapaksa
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப் படத்தினை அலுவலக அறையில் தொங்க விடப்படாததன் காரணமாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திற்கான புகையிரதச் சேவைகள் கடந்த மாதம் 13ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து சிறிது காலம் யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் கடமையாற்றி வந்த நிலையில்,

அவருக்கு திடீரென வவுனியாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவதாகவும்.

அது மட்டுமின்றி 24 வருடங்களின் பின்னர் வடக்கிற்கு யாழ்.தேவி புகையிரதம் வருவதற்கு காரணமாக இருந்த ஜனாதிபதியின் புகைப்படத்தினை அவரது அலுவலக அறையில் தொங்கவிடப்படாமை போன்ற காரணங்கள் கூறியே இவருக்கு உயர் இடத்திலிருந்து இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் இலங்கையிலிலுள்ள புகையிரத நிலைய அதிபர்களில் சிரேஸ்ட உத்தியோகத்தர் என்பதுடன் புகையிரத திணைக்களத்தில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த தமிழ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply