எக்கசக்க பில்டப்பில் என்னை அறிந்தால்: மாஸ் கிளப்புமா?

ajith3434-jpgஅஜீத் தனது படங்களில் பஞ்ச் வசனம் பேச மாட்டார், ஓபனிங் பாடல் கேட்க மாட்டார், படத்தின் பெயர்கூட பில்டப் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

ஆனாலும் அவரும் தமிழ்ப்பட ஹீரோதானே. பில்டப் தானாகவே ஒட்டிக் கொள்ளும். கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துக்கு ஒபனிங் பாடல் உள்ளது.

அருண்குமாரும் அவருடன் ஆடியிருக்கிறார். அதாரு உதாரு என்று தொடங்கும் இந்தப் பாடலின் இரண்டாவது வரி, பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்…. இதேபோல் அடுத்தடுத்த வரிகளும் செம பில்டப்புடன் எழுதப்பட்டுள்ளது.

விஜய் பிரகாஷும், கானாபாலாவும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்

Tags: , ,

Leave a Reply