எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார்.
மருத்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த பொன்சேகா இன்று காலை நாடு திரும்பினார்.
ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் அன்று முற்பகல் ரணிலிடம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொன்சேகாவின் இந்த யோசனையை சமகி சக்தி அமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில் பொது வேட்பாளராக போட்டியிட மிகத் தகுதியானவர் ரணில் விக்ரமசிங்க தெரியவந்துள்ளது.
















