கண்டி கன்னொருவ மைதானத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பில் மாற்றங்களை செய்யும் நோக்கில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளேன்.
இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு ஒராண்டு காலம் கடந்துள்ளது.
ஜனாதிபதி என்ற போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பினை நாடாளுமன்றிடம் விட்டுவிட்டேன்.
எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமது கருத்தை வெளியிடாத ஐக்கிய தேசியக் கட்சியினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு கோரி நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது.
தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுத்தேன்.
தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அரசாங்கம் தெளிவான திட்டமொன்றை முன்வைத்துள்ள நிலையில் அதனை பலவீனப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் போலிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
நிறைவேற்று அதிகராத்தை ரத்து செய்ய வேண்டுமென சிலர் தெரிவுக்குழுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் மற்றுமொரு தரப்பினர் நிறைவேற்று அதிகாரம் அவசியமானது என தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சுமார் 20 வரையிலான ஆசனங்கள் காணப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச்செய்தால் “சம்பந்தன் சரணம் கச்சாமி” என்று சொல்லி கூட்டமைப்பின் பின் செல்ல நேரிடும்.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க, பிரிவினைவாதத்தை தடுக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொருளாதாரத்தை வலுப்படுத்த, வெளிநாட்டு அழுத்தங்களிலிருந்து நாட்டை பாதுகாக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகின்றது.
நாம் நாட்டை காட்டிக்கொடுக்வோ அல்லது 600 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண பிடிவிராந்து வழங்கவோ உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
















