சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதுப் படத்தின் கதை என்ன? – இதோ….

vijay-jillaகத்தி படத்தின் சர்ச்சைகள் சற்றே ஓய்ந்துள்ளநிலையில், இப்போதுதான் விஜய் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்.

அதற்குள் அவரது அடுத்தப் படமான மாரீசன் படம் பற்றிய செய்திகள் அடிபட ஆரம்பித்துவிட்டன.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 ஆம்தேதிதான் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கி முழுசாக ஒருவாரம் கூட ஆகவில்லை.

அதற்குள் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளாக வெளி வரத்தொடங்கி உள்ளன.

விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள உத்தண்டி இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் ஹன்சிகாவுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார்.

‘நான் ஈ’ படப் புகழ் கன்னட நடிகர் சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் மாரீசன் படத்தில் நடிப்பது பற்றியும், அப்படத்தின் கதை பற்றியும் சில தகவல்களை சொல்லி இருக்கிறார் கன்னட நடிகர் சுதீப்.

”என்னைப்பொருத்தவரை இது ஒரு வித்தியாசமான படம். வெளிப்படையாக சொல்வதென்றால் இது ஒரு ஃபேன்டஸி படம். இப்படத்தில் மிகப்பெரிய ஒரு ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவி மேடம் நடிக்கிறார். அந்த ராஜ்ஜியத்தைக் கட்டிக்காக்கும் தளபதியாக நான் நடிக்கிறேன்.

உண்மையைச் சொல்லப்போனால் இப்படத்தில் நடிப்பதற்கு அவர்கள் என்னை ப்ரோச் பண்ணியபோது ஆரம்பத்தில் என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் நடிக்க மறுத்துவிட்டேன். அவர்கள் வற்புறுத்தி கேட்டும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டு மாதமாக ‘அந்த கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்’ என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

ஒரு நடிகனாக என் மீது அவர்கள் நிறைய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் கடைசியில் என் பிடிவாதத்தைத் தளர்த்தி, அந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன்.

இப்படத்தில் எனக்கு முழுக்க நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டருக்கென சில நல்ல குணங்களும் உண்டு. அதேபோல் தீய குணங்களும் உண்டு. ஒரு சாதாரண வில்லன் கதாபாத்திரமாக இது இருந்திருந்தால் என்னை அவர்கள் அணுகியிருக்கவே மாட்டார்கள்!”

என்று சுதீப் சொன்னதன் மூலம் விஜய்யின் புதிய படம் பற்றிய ரகசியம் உடைபட்டிருக்கிறது.

Tags: , ,

Leave a Reply