நாட்டின் தற்போதைய ஊழல் ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கு தனது கட்சியினர் முன்னிற்பார்கள் என்று சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, நேற்று தனது கட்சி முக்கியஸ்தர்களுடன் கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டபின் அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா,
கடந்த முறை போன்று இம்முறையும் பொது அபேட்சகர் ஒருவரை முன்னிறுத்தினால் மட்டுமே இந்த ஊழல் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க முடியும். அதற்கான முயற்சியில் எனது கட்சி முன்னிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுடன் அவரது மனைவி அனோமா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிடிய ஆகியோரும் குறித்த விஜயத்தின் போது உடனிருந்தனர்.
















