நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் – சுரேஸ் பிரேமசந்திரன்

suresh-premachandran1நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சில முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சி இன்னமும் உறுதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத்திட்டமொன்றை வழங்குதவாக உறுதியளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு ஆளும் கட்சி வேட்பாளரின் பதில் மற்றும் எதிர்கட்சி வேட்பாளரின் பதில் ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இதுவைரயில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளருக்குஆதரவளிப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply