மேலும் ஒரு பிணைக்கைதி தலை அறுத்து கொலை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ள திடுக்கிடும் வீடியோ.

isis-terrorist-released-videஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அமெரிக்காவின் உதவிகள் முழு அளவில் இருந்து ஈராக் மற்றும் சிரியா அரசுகளால் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும்வண்ணம் அவ்வப்போது பிணைக்கைதிகளை பிடித்து சித்ரவதை செய்து கொன்று அதன் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி அளித்து வருகின்றனர். இவ்வாறு பலரை கொன்று வரும் தீவிரவாதிகள் நேற்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஒரு பிணைக்கைதியின் தலையை துண்டித்து தீவிரவாதி ஒருவன் நிற்கும் அதிர்ச்சி காட்சி அடங்கியுள்ளது.

பன்னாட்டு செய்தி நிறுவனமான ‘ஏஜென்ஸி ஃபிரான்ஸ்-ப்ரெஸ்ஸி என்ற செய்தி நிறுவனத்திற்கு இந்த வீடியோ கூரியர் பார்சலில் வந்துள்ளது. இந்த வீடியோவில் சிரியா போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் தொண்டூழியம் செய்வதற்காக பெய்ருட் நகரில் தங்கியிருந்த பீட்டர் காஸிக் என்பவரின் தலையையும் துண்டித்க்கப்படும் காட்சி உள்ளது. நேற்று வெளியான இந்த வீடியோ உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags: , ,

Leave a Reply