ஆம்பளைங்களுக்கு ரூ.250….பொம்பளைங்களுக்கு ரூ.200: இது காங்கிரஸ் கூத்து

congressபுதுக்கோட்டையில் கடந்த 15ம் திகதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
இதற்கு முன்னோட்டமாக ஒருவாரத்திற்கு முன்பு ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்கள். அதில் வெறும் இருபது பேர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த இரண்டு நாட்களில் வாசன் தரப்பு சாருபாலா தொண்டைமான் தலைமையில் கூட்டத்தை புதுக்கோட்டையில் கூட்ட, அதில் சுமார் இருநூறு பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தகவல் ப.சிதம்பரத்தின் கவனத்திற்கு போயிருக்கிறது. உடனே என்ன செய்வீர்களோ இன்னும் இரண்டு நாட்களில் ஒரு பெரும் கூட்டத்தை கூட்டியே ஆக வேண்டும் என மாவட்ட தலைவர் புஷ்பராஜிடம் சொல்லியிருக்கிறார்.

அவரும் ஆண்களுக்கு 250ம், பெண்களுக்கு 200ம் கொடுத்து சுமார் ஆயிரம் பேரை கூட்டியிருக்கிறார்.

கூட்டத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். அவர்களும் இடமில்லாமல் வெளியில் அமர்ந்து கிராமத்து விடயங்களை பரிமாறிக்கொண்டிருக்க, கூட்டத்தில் பேசிய முன்னணி தலைவர்கள் மோடியை திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

திருநாவுக்கரசர் பேசும்போது, ஒரு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகள் இருந்தது. ஐந்துமே காங்கிரஸ் தொகுதிகளாக இருந்தது. நான் கஷ்டப்பட்டு அதிமுக கோட்டையாக மாற்றினேன், இப்போது மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் என்று கூறியுள்ளார்.

இளங்கோவன் பேசுகையில், வாசன் என்கிற பெயரை உச்சரிக்காமல் பிரிந்து போனவர்கள் திருச்சியில் கூட்டத்தை கூட்டுகிறார்களாம். அதில் ஐந்து லட்சம் பேரை திரட்டுவார்களாம். ஒரு கூட்டத்தில் ப.சிதம்பரம் சொன்னார். அவர்கள் கூட்டம் நடத்தும் இடம் மிகச்சிறியது. அதில் ஐந்து லட்சம் பேர் எப்படி அமர முடியும் என்றிருக்கிறார். ஒரு நபர் சேரை போட்டு உட்கார இரண்டரை சதுர அடி இடம் வேண்டும்.

அவர்கள் கூட்டம் போடும் இடத்தில் அதிகபட்சமாக இருபத்தைந்தாயிரம் பேர் மட்டுமே அமர முடியும். அந்த இடத்தை அவர்கள் நிரப்பி அதன்பிறகு பத்து லட்சம் பேர் என்று கூட சொல்லட்டும் எனக்கு சந்தோஷம் தான் என்றவர். முதலில் அந்த கூட்டம் நடக்கிறதா என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் பேசுகையில், தலைவர் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் என்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சி இல்லை. நரசிம்மராவிற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டது.

இருபது எம்.பி.க்கள் அப்போது இருந்தார்கள். அவர்களை நேராக அன்னை சோனியாவிடம் அழைத்துச்சென்று இவர்கள் உங்களின் கீழ் இருப்பார்கள் என்று சொன்னார்.

இந்த நாட்டில் எத்தனையோ கட்சிகள் உதயமாகி இன்று காணாமல் போயிருக்கிறது. அப்படி காணாமல் போகும் கட்சியில் புதிதாக 28ம் திகதி உருவாகப்போகும் கட்சியும் ஒன்று என்று கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply