மஹிந்த ராஜபக்‌ஷ நோர்வே அரசுமீதும் தன்மீதும் பழிசுமத்துகிறார்: எரிக் சொல்ஹெய்ம்.

erik_solheim3இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நோர்வே அரசுமீதும் தன்மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களையே முன்வைத்திருக்கிறார். அவரது குற்றச்சாட்டுக்கள் குறித்த மறுப்பு அறிக்கையை நான் நாளை திங்கட்கிழமை வெளியிடுவேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். இலங்கை ஜனாதிபதி தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்கமுடியாதவை.

அவர் பொய் சொல்லுகிறார் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, நோர்வேயின் முன்னாள் அரசு மீதும், சொல்ஹெய்ம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply