இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தனது கணவருக்கு மொபைல் நிறுவனம் தொடர்ந்து பில் அனுப்பிக்கொண்டிருப்பதாக புகார் கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 59 வயதுள்ள பெண் Maria Raybloud, இவருடைய கணவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மரணம் அடைந்துவிட்டார். அதன்பின்னர் Maria Raybloud தனது கணவர் வைத்திருந்த டி.மொபைல் என்ற நிறுவனத்திற்கு சென்று தனது கணவர் இறந்துவிட்டதாகவும் அதனால் தனது கணவரின் மொபைல் இணைப்பை ரத்து செய்யுமாறும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து தனது கணவரின் மொபைல்போனுக்கு பில் வந்து கொண்டிருப்பதாகவும் லேட்டஸ்ட் ஆஃபர் குறித்த தகவல்களும் வந்து கொண்டிருந்ததால் நேரடியாக டி.மொபைல் நிறுவனத்திற்கு சென்று தனது கணவரின் இறப்பு சான்றிதழை காண்பித்து தனது கணவரின் மொபைல் போன் இணைப்பை துண்டிக்க கோரினார். அதுமட்டுமின்றி கணவரின் சாம்பலையும் கொண்டுவந்து மொபைல் நிறுவனத்திற்கு கொண்டுவந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டி.மொபைல் அதிகாரிகள் உடனடியாக அவருடைய கணவரின் மொபைல் போன் இணைப்பை துண்டித்தனர்.
















