பாஜக தலைமை அலுவலகத்திற்கு அல்கொய்தா வெடிகுண்டு மிரட்டல் – தமிழிசை

tamilisai-soundararajan141-சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு அல்கொய்தா தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும், ஆனால் அதற்கெல்லாம் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். அப்போது அவர், ‘இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply