ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கான மக்கள் ஆதரவு 54 வீதத்தில் இருந்து 47 வீதமாக படுவேகமாக குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு அரச திணைக்களம் ஒன்றின்
ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் இது தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு இருந்த மக்கள் ஆதரவு 7 வீதமாக குறைந்துள்ளமையானது அரசாங்கத்தின் விசேட கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத பின்னணியில் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளமை சிக்கலுக்குரியது என கருத்து கணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை அறிவித்தால் ஜனாதிபதிக்கான மக்களின் ஆதரவு மேலும் வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















