மன்னாரில் எண்ணெய் வருமென்றால் சுன்னாகத்தில் ஏன் எண்ணெய் வராது என்றும் சுன்னாகத்திலும் நிலத்திற்கு கீழ் என்ணை தான் வருவதாகவும் மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்ற நொர்தேன் பவர் கழிவு ஒயில் தொடர்பான
வழக்கில் நொர்தேன் பவர் நிறுவனம் சார்பில் ஆஐரான சட்டத்தரணி திருமதி சிவபாதம் தெரிவித்துள்ளார்.
நொர்தேன் பவர் நிறுவனம் சார்பில் மன்றில் ஆஐராகியிருந்த சட்டத்தரனி திருமதி சிவபாதம் மேலும் தெரிவிக்கையில்:
யாhழ்ப்பாணத்தில் போதியளவு மின்சாரமும் சீரான மின்சாரமும் இல்லாத நிலையில் இருந்த போது நோர்தேன் பவரின் வருகையினால் தற்போது போதியளவு மின்சாரம் கிடைக்கின்றது. இத்தோடு இதனை விரும்பாதவர்கள் இதற்கு எதிராகச்செயற்படுகின்றனர். குறிப்பாக விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்தே கழிவு ஒயில் கிணற்று நீருடன் கலக்குதா என்றும் மக்கள் பாதிப்படைகின்றனரா என்றும் கண்டுபிடிக்க வேண்டும்.
அத்தோடு மன்னாரில் எண்ணைக்கசிவு ஏற்படுகின்றது. அவ்வாறாயின் சுன்னாகத்தில் ஏன் எண்ணைக்கசிவு ஏற்படக்க கூடாது அப்படியும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சட்டத்தரணி திருமதி.சிவபாதம் மன்றில் மேலும் தெரிவித்தார்.
இந்த வழக்கின் நொர்தேன் பவர் மற்றும் உந்துறு மற்றும் சுற்றுச்சூழல் அதிகார சபையின் சார்பில் சட்டத் தரணிகளான திருக்குமரன், மோகன், திருமதி சிவபாதம் உட்பட மேலுமொரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஆஐராகியிருந்தார்.
இதே வேளையில் மக்கள் சார்பில் பொது நலன் நோக்கில் இலவசமாக சட்டத்தரணிகளான குருபரன், பார்த்தீபன், nஐயருபன், மணிவண்ணன், தேவராசா, பூலோக சிங்கம் ஆகிய ஆறு சட்டத்தரணிகள் ஆஐராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















