அமெரிக்க பிணைக்கைதியின் தலையை துண்டித்தது மேற்கத்திய நாட்டு தீவிரவாதிகளா? வீடியோவில் அதிர்ச்சி தகவல்

isreal3434-600அமெரிக்க பிணைக்கைதி Peter Kassig அவர்களின் தலை துண்டிக்கும் வீடியோவில் மேற்கத்திய நாடுகளின் தீவிரவாதிகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிரியா மற்றும் இராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பல பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டு அவர்களை கொலை கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட அமெரிக்க சமூக தொண்டு நிறுவன ஊழியர் Peter Kassig என்பவர் சமீபத்தில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அவருடன் சேர்ந்து பிடிபட்ட 18 சிரியா ராணுவ வீரர்களும் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் பிணைக்கைதிகளின் தலை துண்டிக்க அவர்களின் பின்புறம் கத்தியுடன் நிற்கும் தீவிரவாதிகள் பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் என தற்போது தெரிய வந்துள்ளது.

அவர்களில் 2 பேர் பிரான்சை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவனது பெயர் மாஸிம் ஹவுசார்ட் (22) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவன் வடக்கு பிரான்சின் நார்மண்டி பகுதியை சேர்ந்தவன். இவனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரி பிரான்கோயில் மொலின்ஸ் கூறியுள்ளார்.

ஹவுசார்ட் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிரியா சென்றதாக பிரான்ஸ் உள்துறை மந்திரி பெர்னார்ட் கசோனயுவ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த நசீர் முத்தன்னா (20) என்பவனும் வீடியோவில் இருப்பது தெரியவந்துள்ளது. இவன் வேல்சில் உள்ள கார்டிப் மருத்துவக்கல்லூரி மாணவன் ஆவான்.

Tags: , ,

Leave a Reply