தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களின் முதல்வர் ஜெயலலிதா என இரு முதல்வர்கள் தமிழகத்தில் இருப்பதாக கருதி வரும் மக்களுக்கு ஒரு நற்செய்தி.. தமிழகத்தில் தற்போது மேலும் இரு முதல்வர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க, தெரிவிக்க, புரிய வைக்க வேண்டி, மதுரை பக்கம் போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்தியுள்ளனர் காங்கிரஸார்.
காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் முடிந்தது, கோல்மால் அரசியல் முடிந்தது என்று பலரும் எண்ணி வந்த வேளையில் புது கலக்கலை எடுத்து விட்டுள்ளனர் காங்கிரஸ் தலைகள். மதுரையில் ஒரு போஸ்டரைப் பார்க்க முடிந்தது. அதில் கிராமத்து பண்ணையார் கெட்டப்பில், நாட்டாமை சரத்குமார் கெட்டப்பில், கார்த்தி ப.சிதம்பரம் ஒரு ஒரு பெரிய சேரில் அசால்ட்டாக உட்கார்ந்திருக்கிறார். பார்க்கவே செம ஸ்டைலுங்கோ…! பக்கத்தில் வாசகங்கள்…
















