மேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடை வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் சில தந்திரங்களை கற்றுக் கொள் வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மேஷம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடை வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் சில தந்திரங்களை கற்றுக் கொள் வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மிதுனம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கடகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்ற பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தடைகள் உடைபடும் நாள்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக் கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப் படும் நாள்.
விருச்சிகம்: சில வேலை களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு: பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிறப்பான நாள்.
மகரம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீ£கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விலகி நின்ற வர்கள் விரும்பி வருவார்கள். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங் களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். சிலர் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
















