அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தின் டெல்டோனா என்ற நகரைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ஸ்டோல்ட். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே மாமிசத்தை தீயில் வேக வைப்பதுபோன்ற வித்தியாசமான வாடை வீசியதை கண்டறிந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஏஞ்சலா உடனடியாக அருகில் இருந்த போலீசிடம் தகவல் செய்தார். தகவல் தெரிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் ஏஞ்சலா வீடு அருகே இருந்த வீடுகளில் சோதனை செய்தனர். அப்போது அண்டை வீட்டில் குடியிருக்கும் 42 வயது பெண் ஒருவர் வாலிபர் ஒருவரை கொலை செய்து அந்த கொலையை மறைக்க அவரது உடல் பாகங்களை தீயில் போட்டு எடுத்தும், சமையல் செய்ததும் தெரிய வந்தது.
உடனே அந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பெயர் ஜேம்ஸ் ஷெப்பர் (36) என கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவராக பணி புரிந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து வங்கியில் கூட்டாக கணக்கு வைத்திருந்தனர். அதை தொடர்ந்து வங்கியில் எடுக்கப்பட்ட பணத்தை பிரிக்கும்போது ஏற்பட்ட தகராறில் டிரைவர் ஜேம்ஸ் ஷெப்பர் கொலை செய்யப்பட்டார். தடயத்தை மறைக்க அவரது உடல் பாகங்களை தீயிட்டு எரித்ததை அப்பெண் ஒப்புக் கொண்டார்.
















