அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்கள் உள்பட சுமார் 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த 2008ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்களும் அடங்குவார்கள்.
எதிர்க்கட்சி மறுப்பு சட்டவிரோதமாக குடியிருப்போரின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் என்று அதிபர் ஒபாமாவின் விருப்பினலும், எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் எதிர்க்கட்சி அபார வெற்றி செனட் சபைகளில் மெஜாரிட்டி பெற்றுள்ளதால் ஒபாமாவால் சட்டம் இயற்ற முடியவில்லை,
இந்நிலையில் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய ஒபாமா, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருந்தாலும், குடியுரிமை சீர்திருத்தம் போன்ற முக்கிய விஷயங்களில் பாராளுமன்றத்தின் முடிவை நிராகரிப்பேன் என திட்டவட்டமாக அறிவித்தார். இருப்பினும் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறாது.
இது தொடர்பாக ஒபாமாவுக்கு நெருக்கமான ஒருவர், ஜனநாயக கட்சி எம்.பி.க்களுடன் விவாதித்ததாகவும் தெரிகிறது. ஏற்கனவே ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் மெஜாரிட்டி தலைவர் ஹாரி ரெயிட், ஒபாமா குடியுரிமை சீர்திருத்தம் செய்ய உகந்த தருணம் இது என்று கடந்த திங்கட்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.
















