பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கை விஜயம் செய்யும் போது புதிய ஜனாதிபதியொருவர் நாட்டில் பதவியில் இருப்பார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதனால், பாப்பரசருக்கு ஜனாதிபதி தேர்தல் தடையாக அமையப் போவதில்லை.
பழைய நிலைமையில் பழைய ஜனாதிபதியை பாப்பரசர் சந்திக்க மாட்டார். புதிய ஜனாதிபதி ஒருவரையே பாப்பரசர் சந்திப்பார்
ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசாங்கத்தை விட்டு விலகியதனால் போட்டி ஏற்பட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றியீட்டுவார்.
புதிய ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் உலகமே ஏற்றுக்கொண்ட முக்கியமான மதத் தலைவரான பாப்பரசரை சந்திக்க உள்ளார் என டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் இலங்கை விஜயம் செய்யும் காலப்பகுதியில் தேர்தலை நடத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நேற்று இந்த கருத்துக்களை வெளியிட்டியிருந்தார்.
















