இன்றைய ராசிப் பலன்கள் 21.11.2014

astrology2மேஷம்: கடினமான காரியங்களை யும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியா பாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கனவு நனவாகும் நாள்.

கடகம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். நட்பு வட்டம் விரியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நேர்மறை சிந்தனைப் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: கணவன்,மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமா கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
மகரம்

மகரம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கும்பம்: கணவன்,மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தெளிவான முடிவுகள் எடுப் பீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Tags: 

Leave a Reply