உலக அளவில் தீவிரவாத தாக்குதல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல். முதல் இரண்டு இடங்களில் ஈராக், சிரியா.

irag-photoஉலக அளவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியல் ஒன்றை லண்டனை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் சமாதான நிறுவனம் ஒன்று சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் உலகிலேயே அதிகளவு தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் முதலிடத்தில் ஈராக் உள்ளது. அங்கு 2 ஆயிரத்து 492 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதில் 6 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. 4-வது, 5-வது இடம் முறையே நைஜீரியாவுக்கும், சிரியாவுக்கும் கிடைத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 10 ஆயிரம் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்பட்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்பை விட 2013ஆம் ஆண்டு தாக்குதல் 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக சர்வே கூறுகிறது.

பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கம் 2000-2013 இடையே 778 தாக்குதல்கள் நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றில் 12 சதவீத தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதல்கள் ஆகும். உலகளவில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகளை கொண்ட அமைப்பாக தலிபான் திகழ்கிறது. இதில் 36 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான வீரர்கள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2000 ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டுவரை தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய இயக்கங்களில் விடுதலைப்புலிகள் இயக்கம் 8வது இடத்தில் உள்ளது.

Tags: , ,

Leave a Reply