மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடத்தப்பட்ட செயற்குழு கூட்டத்தில் குழப்பம்!

mahinda-basilஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இரவு இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் சில விடயங்களை முன்வைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்ற நிமல் ஜயசிங்கவுக்கு குருணாகல் மாவட்டம் பொல்கஹாவல தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதனை அடுத்து கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

அந்த தொகுதியின் அமைப்பாளராக பணியாற்றி வரும் டிகிடி அதிகாரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

அதிகாரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால செயற்பட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி நீண்ட கால உறுப்பினரான பொல்கஹாவல தேர்தல் தொகுதி அமைப்பாளர் வெளியேறியதால் அங்கு பலருக்கு அதிர்ப்தி ஏற்பட்டது.

Tags: , ,

Leave a Reply