ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாளில் அபசகுனம்!– மகிந்த திறந்து வைக்கவிருந்த கட்டிடம் ஒன்றில் தீ

Mahinda-Rajapaksaபல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் செயன்முறை கல்வியில் ஈடுபட்டு வந்த அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள பேராசியர் பிரிவில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டது.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் அவசரமாக திறந்து வைக்கப்படவிருந்த சீடி ஸ்கேன் இயந்திரத்தை பொருத்திக் கொண்டிருந்த போது மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவியுள்ளது.

சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான இந்த இயந்திரம் வடக்கு, வடமத்திய அவசரமான நேரத்தில் குருணாகல் வைத்தியசாலை உட்பட வைத்தியசாலைகள் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஸ்தாபிக்கப்படவிருந்தது.

6 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் 71 முதல் 78 வரையான 8 வைத்திய விடுதிகள் உள்ளன. இதில் குறைந்தது 50 விடுதிகளில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ காரணமாக நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்டிடம் வெறுமையாக்கப்பட்டுள்ளது. தீ காரணமாக ஏற்பட்டுள்ள .இழப்பு 50 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply