அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்: பிரதமர் பதவியிலும் மாற்றம்!

mahintha-rajapakshaஅமைச்சரவையில் தீடீர் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் இவ்வாறு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதுவரையில் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதாக அச்சுறுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வகித்து வரும் பதவி, சம்பிக்க ரணவக்கவினால் கைவிடப்பட்ட பதவி ஆகியனவற்கு புதியவர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களையும், புதிய பிரதி அமைச்சர்களையும் எதிர்பார்க்க முடியும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரதமர் பதவியிலும் பெரும்பாலும் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply