எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்யப்படும்.
தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளபப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
















