யாருக்கு ஆதரவு? : அவசரமாக முடிவெடுக்காது த.தே.கூ

tnalogo2எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த கட்சியினை ஆதரிப்பது என்பது தொடர்பில் அவசரமாக முடிவெடுக்க முடியாது ஆராய்ந்தே முடிவெடுக்கு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply