அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வர நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்.
இன்னும் பலர் எதிர்க்கட்சியில் இணையவுள்ளனர்.
இந்தநிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைப்பார்.
இதன்பின்னர் இடம்பெறும் பொதுத்தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்க்கட்சியால் பெற்றுக்கொள்ள முடியும் என்று தி;ஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை தற்போது ஐக்கிய தேசியக்கட்சி 75 முதல் 80வீத எதிர்க்கட்சி வாக்குகளை கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபியுடன் தமது கட்சி பேச்சு நடத்துவதாகவும் அத்தநாயக்க கூறியுள்ளார்.
















