ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்கு இழுத்தெடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
இன்று மாலைக்குள் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 150 கோடி வீதம் அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
















