யாரும் இல்லாமையே ஆளும் கட்சியாளரை எதிர்கட்சி நிறுத்த காரணம்; என்கிறார் பசில்

basilஆளுங்கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு இன்னும் சந்தர்ப்பம் காத்திருக்கின்றது. அவர்கள் திரும்பி வந்தால் மீண்டும் எம்முடன் இணைந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் ஜனாதிபதியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் உரையாற்றியதாவது,

ஆளுங்கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாம். அவர்களுக்கு நாம் சந்தர்ப்பத்தினை வழங்குவோம்.

நேற்று வரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்பது சங்கீதக் கதிரை போன்று பலரைச் சுற்றிக் கொண்டிருந்தது. அத்துடன் பலவந்தமாக உட்கார வைக்க முயன்ற போதிலும் பலர் தவிர்ந்து கொண்டனர்.

ஏனெனில் அதனை ஏற்றுக் கொண்டால் பலியாடுகளாக நேரிடும் என்று அவர்களுக்குத் தெரியும். எனினும் யாரும் இல்லாத நிலையில் ஆளுங்கட்சியிலிருந்து ஒருவரை அழைத்து அதில் உட்கார வைத்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த அலுவலக திறப்பு விழா நிகழ்வை துமிந்த சில்வா ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply