“எதிரணியின் பின்னாலோ பொது வேட்பாளராகிய எனக்குப் பின்னாலோ வெளிநாட்டு சக்திகள் இல்லை!” – “பண்டாரநாயக்கவின் ஆசை நிறைவேறும்” – மைத்திரிபால சிறிசேனா
பொது எதிரணியின் பின்னாலோ பொது வேட்பாளராகிய எனக்குப் பின்னாலோ, எந்தவிதமான வெளிநாட்டு சக்திகளும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகின்றேன்.
நாட்டு மக்களின் நலனுக்காகவே நாங்கள் இணைந்திருக்கின்றோம். இதனைக் குழப்புவதற்காக எம்மீது தேவையில்லாமல் பழி போடுகிறார்கள் என பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பண்டாரநாயக்கவின் ஆசை நிறைவேறும்: மைத்திரிபால:-
ஜனவரி 8ஆம் திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றமை மகிழ்ச்சி தருகிறது. காரணம், அன்றையதினமே பண்டாரநாயக்கவின் பிறந்ததினம். அவரது கட்சிக்கு புத்துயிர் கிடைக்கும் தினமாக அன்றைய தினம் அமையவிருப்பதால், பண்டாரநாயக்கவின் ஆசை நிறைவேறும் என பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துகளை கூறியுள்ளார்.
















