புலிகள் – புலம்பெயர் அமைப்புகள் மீது சவாரியை ஆரம்பித்தார்கள் மகிந்தரும் பரமார்த்த சீடர்களும்

ltte-mahiபுலிகள் – புலம்பெயர் அமைப்புகள் மீது சவாரியை ஆரம்பித்தார்கள் மகிந்தரும் பரமார்த்த சீடர்களும் – புலம்பும் அமைச்சர்கள் – ஒரே பார்வையில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பாரிய நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமைச்சர் சுசில்பிரேமஜயந்த சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளர் வெளிநாட்டு சக்திகளின் ஓர் சதித் திட்டமாகும் – டலஸ் அழப்பெரும:-

பொது வேட்பாளர் வெளிநாட்டு சக்திகளின் ஒர் சதித் திட்டமாகும் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பானது வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கைப்பொம்மை ஆட்சி ஒன்றை நிறுவும் நோக்கில் வெளிநாடுகளின் சில தூதரகங்கள் எதிர்க்கட்சிகளுக்கு பாரியளவில் பணத்தை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சூழ்ச்சித் திட்டங்களை கைவிடுமாறு அவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சதித் திட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் விரைவில் அம்பலப்படுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நெடுந்தொடர் ஒன்றில் மைத்திரிபால சிறிசேன நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

100 நாட்ளுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாகவும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்த போதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசியல் சாசனத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரோகிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா:-

துரோகிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்தவர்களுக்காக அல்லது கட்சியை காட்க் கொடுத்தவர்களுக்கா ஆதரவளிக்க வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன கட்சியில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பொது வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏகமனதாக தீர்மானம் எடுத்த போது, கரங்களை உயர்த்தி மைத்திரிபாலவும் ஆதரவளித்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதானது தனிப்பட்ட காரணங்களுக்காகவே அன்றி, அரசியல் காரணங்களுக்காக அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதிக்கு நிகரான தனிப்பட்ட நபர்களோ அரசியல் கட்சிகளோ கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் தனது இருப்பினை உறுதி செய்து கொள்வது அவரவர் சமர்த்தியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply