தமிழக மீனவர்கள் ஐந்துபேர் விடுதலையில் இந்தி நடிகர் சல்மான்கான் மற்றும் பத்திரிகையாளர் ராஜெட் ஷர்மா மறைமுகமாக உதவியதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சல்மான்கானின் தங்கை திருமணத்திற்கு பத்திரிக்கையாளர் ராஜெட் ஷர்மா, இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜபக்சேவை அழைத்த போது மீனவர் விடுதலை விவகாரத்தை அவரது கவனத்திற்கு எடுத்துசென்றுள்ளார்.
சல்மான்கானின் நண்பரான ஷர்மா, பிரதமர் மோடிக்கும் நீண்டகால நண்பர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மேமாதம் நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடியுடன் ஷர்மா நேர்காணல் நடத்தியுள்ளார்.
மேலும் கடந்த 9ஆம் திகதி மீனவர்கள் விடுதலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடிய போது ராஜெட் ஷர்மா உடன் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
















