ஹாலிவுட் நடிகை பமீலா ஆன்டர்சன், தான் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், அதை இதுவரை வெளியிடாதது ஏன் என்பதற்கான காரணத்தையும் அறிவித்துள்ளார். அவரை ஆறு வயது முதல் பத்து வயது வரை பராமரித்து வந்த வேலைக்காரி அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அதனால் அந்த வேலைக்காரியை ஒரு சமயத்தில் கொலை செய்யவும் துணிந்ததாகவும் கூறினார்.
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளில் ‘வேலைக்காரி சாகவேண்டும்’ என்று கடவுளிடம் பிரதித்துக்கொண்டதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டது பாமீலா ஆன்டர்சனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதனாலேயே இதுநாள் வரை இந்த விசயத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரின் முன்னிலையிலும் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
















