இந்தியாவிற்கு செல்வதற்கு இணைய விசா : இலங்கை உள்ளிட்ட சிலநாடுகளுக்கு கிடையாது

india-map3454-600வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இணையதளம் மூலம் விசா பெறும் வசதியை இந்திய சுற்றுலாத் துறை அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுலாத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இணைய தளம் மூலம் பதிவு செய்து இ-விசா பெறலாம். இந்த வசதி வருகிற 27 திகதி முதல் 43 நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

முதல் கட்டமாக அமெரிக்கா, ரஷியா, பிரேசில், ஜெர்மனி, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட், மொரீஷியஸ் உள்ளிட்ட 43 நாடுகளின் பயணிகள் இந்த வசதியை பெறுவார்கள்.

இருப்பினும் அடுத்த 2 ஆண்டுகளில் இத்திட்டம் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக்கப்படும். இணையதளம் மூலம் இ-விசா பெற விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட இணையத்தள முகவரிக்கு சென்று அதை பெறுவதற்குரிய கட்டணத்தை செலுத்தவேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு 96 மணி நேரத்தில் இ-விசா வழங்கப்பட்டுமென அவர் கூறினார்.

இதேவேளை இந்த விசா விண்ணப்பம் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சோமாலியா, நைஜீரியா போன்ற சில குறிப்பிட்ட நாடுகள் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply