எனது தாயைத்தவிர யார் காலிலும் விழாதவன் நான்: வைகோவின் குட்டை உடைத்த(து) புகைப்படம்! அவர் கூறும் தாய் இவர் தானோ?

vaiko-karunaகடந்த 20.11.2014 அன்று மதியம் 12 மணிக்கு லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்திற்கு சென்ற ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அங்கு பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் பென்னிகுவிக் சிலையின் காலில் விழுந்து வணங்கினார்.

அதன்பின் லோயர்கேம்ப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட குறுவனத்துப் பாலத்தில் நின்று பெரியாற்றில் மலர் தூவினார். அணையில் 142 அடி நீர் தேங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கியவர் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசியதாவது:

வீரவணக்கம்:

எனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தினம் இது. பெரியாறு அணையை கட்டிய மாமனிதர் பென்னிகுவிக். பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நடந்த போராட்டத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட ஜெயப்பிரகாஷ், ராமமூர்த்தி, இடிமுழக்கம் சேகர் ஆகிய மூன்று மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாயைத்தவிர யார் காலிலும் விழாதவன் நான்:

வைகோ தொடர்ந்து பேசுகையில், ‘நான் இதுவரை எனது தாயை தவிர யார் காலிலும் விழுந்ததில்லை. தென்தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக் சிலையின் காலில் விழுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். அனைவரும் இவர் காலில் விழுந்து வணங்குங்கள். என்று அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.

இப்புகைப்படத்தையும் நீங்கள் ஒருமுறை பாருங்களேன்! அவர் கூறும் தாய் இவர் தானோ?

-கவரிமான்-

Tags: ,

Leave a Reply