ஜனாதிபதித் தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு: பொலிஸ் திணைக்களம்

lk-policeஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்பு கடமைகளுக்காக நான்கு கட்டங்களாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் விசேட தேர்தல் நடவடிக்கை பிரிவும் இயங்கிவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் தேர்தல் நடவடிக்கை பணியகமொன்றை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகங்கள் தோறும் விசேட பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்படவுள்ளன. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு பொலிஸ் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply