மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத் தில் பணிகளை விரைந்து முடிப்பீ£கள். உற்சாகமான நாள்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக்கொள்ளாமல் நடந்துகொள்வார்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மிதுனம்: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பால்ய நண் பர்கள் உதவுவார்கள். தாயா ருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். திடீர் பயணங்கள் உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய அலுவல் களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.
மகரம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மை யும் வந்து செல்லும். பிள்ளை களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இனிமை யான நாள்.
மீனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய் வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
















