ஸ்டாலினை வீழ்த்துவதற்கு களமிறங்கிய குஷ்புவுக்கு பாஜக கை கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக கட்சியில் குஷ்புவிற்கு ஆதரவு கிடைத்ததை விட, எதிர்பார்ப்புகள் கிளம்பியதே அதிகம்.
ஒரு வழியாக திமுகவில் இருந்து விலகிய இவருக்கு, தமிழக கட்சிகள் வரவேற்பு அளித்தன.
ஆனால், இன்னும் எந்த கட்சியிலும் அவர் இணையவில்லை. இந்நிலையில், அவரை பாஜகவின் தமிழக தலைவரான தமிழிசை சவுந்தர்ராஜனே நேரில் சென்று பாஜகவுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்போது தமிழிசையிடம் குஷ்பு வைத்த முக்கிய நிபந்தனையே, ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து நிற்க அனுமதிக்க வேண்டும், வீழ்த்த உதவ வேண்டும் என்பதுதானாம்.
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட தமிழிசை, குஷ்புவின் வரவை உறுதிப் படுத்திக் கொண்டு மேலிடத்துக்கும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே குஷ்புவின் பாஜக பிரவேசத்தை ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
















