சர்வாதிகாரி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டாம் – ஜே.வி.பி

Anurakumara-Dissanayake2சர்வாதிகார போக்கிலான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல நடத்துவது குறித்த உயர் நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தை கட்டுப்படுத்தி வருவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த நடத்தும் சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவரால் மூன்றாவது முறை ஜனாதிபதியாக முடியாது என்றும் நான்கு வருடங்களில் ஜனாதிபதித் தேர்தல் கோரியது தவறு என்றும் அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏகாதிபதி ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தமது பிரச்சாரங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு நபர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தவுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயகம் சுதந்திரம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், பெரும் எண்ணிக்கையிலான நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியளவில் ஊழல் மோசடிகள் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply